சினிமா

அப்போது வென்ற செந்தில் கணேஷிற்கு தற்போது கிடைத்த பெரிய பரிசு!!

Summary:

senthil ganesh got price


விஜய் தொலைக்காட்சி எத்தனையோ திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கொடுத்து தமிழ் சினிமாவில் அவர்களை பிரபலமாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோசங்கர் என பல நடிகர்கள் விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் சினிமாவிற்குள் வந்தவர்களே. அந்த வகையில் தற்போது இந்த பட்டியலில் இணைந்துள்ளனர் நாட்டுப்புற பாடகர்கள் செந்தில்கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர்கள் தமிழ் மக்களிடம் மிகவும் பிரபலமாகிவிட்டனர். தற்போது பலவேறு படங்களில் பாடல்களையும் பாடி வருகின்றனர். அந்த வகையில் சார்லி சாப்ளின் 2 படத்தில் இவர்கள் இணைந்து பாடிய என்ன மச்சான் பாடல் பயங்கர ஹிட் ஆனது. 

சமீபத்தில் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பட்டத்தை வென்றதற்கு, அவருக்கு Arun Excello சார்பாக ஒரு வீடு பரிசு என்று அப்போதே கூறியிருந்தனர். இந்த நிலையில் அந்த வீட்டின் சாவியை சமீபத்தில் தான் செந்தில்-ராஜலட்சுமி தம்பதி பெற்றுள்ளனர். அந்த தகவலை செந்தில்கணேஷ் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.


Advertisement