அரைநிர்வாண வீடியோ எடுத்து..நடந்தது இதுதான்! இரண்டாவது காதலன் மீது செம்பருத்தி சீரியல் நடிகை பகீர் குற்றசாட்டு!!semparuthi-serial-actress-press-meet

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி தொடரில் உமா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜெனிஃபர். அவர் தற்போது சன் தொலைக்காட்சியில் வானத்தைப்போல தொடரில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு கார்த்திக் என்ற கார் டிரைவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு நவீன்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்த நிலையில் முதல் திருமணத்தை மறைத்து ஜெனிஃபர் தன்னை காதலிப்பதாக நவீன்குமார் அவரது குடும்பத்தை தாக்கியதாக சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளிவந்தது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெனிபர் கூறியதாவது, நவீன் குமாருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில் நவீன் குமாருக்கு வேலை போனதால் அவர் 2.5லட்சம் ரூபாய் வரை பணத்தை என்னிடமிருந்து கடனாக பெற்றார். பின்னர் மீண்டும் 5 லட்ச ரூபாய் வேண்டுமென அவர் கேட்டார். அதற்கு நான் மறுத்த நிலையில் அவர் என்னை அடித்து காரில் அரை நிர்வாணமாக வீடியோவாக எடுத்தார்.

Semparthi

மேலும் 5 லட்சம் ரூபாய் பணம் தரவில்லை என்றால் நிர்வாண படத்தை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டினார். அதுமட்டுமின்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு காரில் சென்ற எனது தந்தையையும், தங்கையையும் தாக்கி , ரோட்டில் தங்கையின் ஆடைகளை கிழித்து மானவங்கபடுத்தினர். இதுகுறித்து நான் புகார் அளித்தபோது நவீன் குமார் தந்தை உதயகுமார் காவல்துறையில் அமைச்சு பணியாளராக பணிபுரிவதால், காவல் ஆய்வாளர் சிட்டிபாபு தன்மீது விபச்சார வழக்கு போடுவதாக மிரட்டினார். பின்னர் தாக்கிய வீடியோ ஆதாரங்களை காட்டிய நிலையில், கடமைக்கு கைது செய்துவிட்டு பின்னர் வெளியே விட்டனர். 

மேலும் வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் எனவும் கொலைமிரட்டல் விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சு பணியாளர் உதயகுமார், நவீன் குமார், பிரவீன் குமார், காவல் ஆய்வாளர் சிட்டிபாபு மீது நடவடிக்கை வேண்டும் என காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக ஜெனிபர் கூறியுள்ளார். மேலும் மறைந்த நடிகை சித்ராவின் நிலைமை தனக்கும் வரக்கூடாது என்பதால் தான் இவ்வாறு செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.