சினிமா

சீமராஜா படத்தையும் விட்டு வைக்காத திருட்டு இணையதளம்...! படக்குழு அதிர்ச்சி..!!

Summary:

seemaraja-movie-release-in-internet

சிவகார்த்திகேயனின் கலகலப்பான நடிப்பில் உருவாகி வந்த சீமராஜா திரைப்படம் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அவ்ளோவா வரவேற்பை பெறவில்லை என்றாலும் ஓரளவு வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. பொன்ராம், சிவகாா்த்திகேயன், சூரி கூட்டணியில் உருவாகிவரும் 3வது படம் சீமராஜா. இந்த படத்தில் சமந்தா கதாநாயகியாக மிரட்டும் வில்லியாக சிம்ரனும், சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியனும், முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

இந்த படம் முதல் நாள் முடிவில் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு முன்னதாக வந்த நடிகர் கமல்ஹாசனின் திரைப்படம் தான் விஸ்வரூபம் 2, இந்த படத்தின் சாதனையையும் சீமராஜா படம் முறியடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்நிலையில், நேற்று munthinamae இந்த இப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் இணையத்தில் வெளியீட்டு உள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது. 


Advertisement