seemaraja-movie-box-office-collection
தற்போது தமிழ் சினிமா நடிகர்களில் விரைவாக பிரபலமாகி வரும் நடிகர் தான் சிவகார்த்திகேயன். இது இவரின் திறமைக்கு கிடைத்த பரிசாக கூட நாம் சொல்லலாம். இந்நிலையில் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி அன்று அவரது படம் சீமராஜா வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் நாள் வசூலை கண்டதும் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டம் போட்டு வருகின்றனர்.
மேலும் இவரது முந்தைய படங்களை விட பாக்ஸ் ஆபீஸ் வசூலில் அதிகம் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது சிவகார்த்திக்கேயனின் கடைசி நான்கு படங்களின் முதல் நாளில் தமிழ்நாட்டின் வசூல் எவ்வளவு வந்திருக்கிறது என்று பார்க்கலாம்.
சீமராஜா – 9.80 கோடி
வேலைக்காரன் – 7.40கோடி
ரெமோ – 6.50 கோடி
ரஜினி முருகன் – 4.95 கோடி
சிவகார்த்திகேயனின் திறமையை மையமாக வைத்து அவரின் அடுத்த அடுத்த படங்கள் வெற்றி பெற்று பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சாதனை படைப்பது அவரின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை கொடுக்கிறது. இப்படி தொடர்ந்து வசூலில் கலக்கி வரும் இவருக்கு பாக்ஸ் ஆபீஸ் வசூல் மன்னன் என்று பட்டம் வைத்துள்ளனர் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள்...
Advertisement
Advertisement