சினிமா

சீமாராஜா படத்தின் உண்மையான ரிசல்ட் இன்றைய நாளின் இறுதியில் தான் தெரியும்...! பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கூறிய அதிர்ச்சி தகவல்!

Summary:

Seemaraja is the real reception of the film and it is visible at the end of the day...! Box office reports shocked...!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகர்களுள் இவரும் ஒருவர். சின்னத்திரையில் இருந்து வந்த இவர் தற்போது வளர்ந்து வரும் பிரபல நடிகர்களுள் ஒருவராக ஆனார்.

இவரது நடிப்பில் உருவான படங்கள் அனைத்தும் ஒரு மிக பெரிய வெற்றியை தந்தது. இதனை அடுத்து நடிகர் சிவகார்த்திக்கேயன் நடிப்பில் உருவான  சீமராஜா என்னும் படம் கடந்த வாரம்  திரைக்கு வந்தது.

திரைக்கு வந்த சில நாட்களே இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்தது. இந்த சூழ்நிலையில் விடுமுறை தினம் நேற்றோடு முடிந்தது. இந்த விடுமுறை நாட்களில் சென்னையில் மட்டும் சுமார் ரூ.3 கோடி வசூல் செய்துள்ளது.

மொத்தமாக தமிழகம் முழுவதும் பார்த்தால் இந்த நான்கு நாள் விடுமுறையில் மட்டும் இந்த படம் சுமார் ரூ.26 கோடி வசூல் செய்துள்ளது.
ஆனால் இந்த நான்கு நாள் விடுமுறையில் ரூ 30 கோடி வரை வசூலாகும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

இந்த வாரத்தில் இன்று முதல் நாள் தொடங்கியுள்ளது, இந்த படத்திற்கான  ரியல் சோதனை இனி தான் ஆரம்பிக்க உள்ளது. இந்த படத்தின் உண்மையான ரிசல்ட் இன்றைய நாளின் இறுதியில் தான் தெரியும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.


Advertisement