
சின்மயிக்காக இப்படி பண்ணுற நீங்க, அப்போ எங்கே போனீங்க? சீமானின் நெற்றியடி கேள்வி!.
தற்போது #மீ டூ# ஹேஷ்டேக் மூலம் பிரபலங்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக, சமூகவலைதளங்களில் பெண்கள், நடிகைகள் என பலரும் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக கவிஞர் வைரமுத்து மீது சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது, இந்த நிலையில் சின்மயிக்கு ஆதரவாக பல திரை உலகினர் ஆதரவு தெரிவிக்கும் நிலையில், ஸ்ரீ ரெட்டி ஆதாரத்துடன் பெயரை குறிப்பிட்டு குற்றம் சாட்டும் போது ஏன் ஆதரவு தெரிவிக்கவில்லை என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “கடவுளாக வணக்கக் கூடிய பெண்களைப் போற்ற வேண்டிய சமூகத்தில், அவர்களைப் பாதுகாக்க தனிக்குழு அமைக்க வேண்டிய அவலத்திற்கு வந்து விட்டது.
தற்போது பிரபலமடைந்துள்ள மீ டு மூலம் பாடகி சின்மயி, வைரமுத்து மீது வைத்த பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு நடிகர் சித்தார்த் உள்ளிட்ட பல திரையுலகினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதேபோலத்தான் ஸ்ரீரெட்டியும், ஆதாரங்களுடனும் பெயரைக் குறிப்பிட்டும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் குற்றம் சாட்டினார். அப்போது யாருமே அது குறித்து வாய் திறக்க வில்லையே ஏன் என கேள்வி எழுப்பினார்.
Advertisement
Advertisement