"ரஜினி கால்ல விழுந்ததெல்லாம் ஒரு பிரச்சனையா" சீமானின் காட்டமான பேச்சு.!

"ரஜினி கால்ல விழுந்ததெல்லாம் ஒரு பிரச்சனையா" சீமானின் காட்டமான பேச்சு.!


Seeman support for rajini

90களில் பாஞ்சாலங்குறிச்சி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீமான். அக்காலக்கட்டத்தில் இவர் இயக்கிய 3 திரைப்படங்களுமே தோல்வியையே தழுவின.

seeman

அதன்பிறகு, மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு, நடிகர் மாதவனை வைத்து 'தம்பி' வெற்றிப்படத்தை  இயக்கினார். இவர் 1958ல் ஆதித்தனரால் உருவாக்கப்பட்ட நாம் தமிழர் இயக்கத்தை, 2010 மே 18ல், 'நாம் தமிழர் கட்சி'யாக மாற்றினார். 

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் சீமான், சுதந்திர தமிழ் ஈழம் பெறுவதே நாம் தமிழர் கட்சியின் குறிக்கோள் என்று கூறி வருகிறார். 

seeman

இந்நிலையில், உ பி சென்றிருந்த ரஜினி, அங்கு முதல்வர் யோகி காலில் விழுந்தது சர்ச்சையாகியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் சீமான் . "யோகி காலில் விழுந்ததால் ரஜினி குற்றவாளி ஆகிவிடுவாரா? இல்லை வெங்காயம் விலை குறைந்துவிடுமா? அவர் விருப்பப்படி செய்துகொள்ளட்டும்" என்று கூறினார்.