கொரோனா ஊரடங்கில் நடிகர் சிம்பு வெளியிட்ட ட்ரைலர்! வரவேற்கும் இளைஞர்கள்! வைரலாகும் வீடியோ! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

கொரோனா ஊரடங்கில் நடிகர் சிம்பு வெளியிட்ட ட்ரைலர்! வரவேற்கும் இளைஞர்கள்! வைரலாகும் வீடியோ!

நாடு முழுவதும் கொரோனா பரவி கோரத்தாண்டவமாடி வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால் நடிகர்-நடிகைகள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். மேலும் மக்களும் இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டிலேயே முடங்கியிருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் சிம்பு நேற்று  தேவதாஸ் பிரதர்ஸ் திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார்.

ஜானகிராமன் இயக்கத்தில் எட்சட்ரா நிறுவனம் சார்பில் பி மதியழகன் தயாரித்துள்ள திரைப்படம் தேவதாஸ் பிரதர்ஸ்.இப்படத்தில்  துருவ், ஷில்பா, மஞ்சுநாத், சஞ்சிதா ஷெட்டி, அஜய் பிரசாத், பாலசரவணன், மெட்ராஸ் ஜானி போன்றோர் நடித்துள்ளனர்.  இந்த திரைப்படம் காதல் மற்றும் காமெடி கலந்த திரைப்படமாகும்.

அதாவது காதலில் தோல்வி அடைந்த 4 இளைஞரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை காதல் மற்றும் காமெடி கலந்து சொல்லபட்ட கதையாக எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் டிரைலரை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். இது வைரலாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo