சினிமா

அப்பா வயது நடிகருடன் ஜோடி சேரும் சாயிஷா.. பிரபல நடிகரின் படத்தை விட்டு ஓட்டம் பிடித்த ஆர்யா மனைவி..

Summary:

சமூக வலைத்தளங்களில் அதிக கேலி கிண்டல் எழுந்ததை அடுத்து பெரிய நடிகர் ஒருவரின் படத்தில் இருந்து திடீர் என விலகியுள்ளார் நடிகை சாயிஷா.

சமூக வலைத்தளங்களில் அதிக கேலி கிண்டல் எழுந்ததை அடுத்து பெரிய நடிகர் ஒருவரின் படத்தில் இருந்து திடீர் என விலகியுள்ளார் நடிகை சாயிஷா.

23 வயதில் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வருகிறார் இளம் நடிகை சாயிஷா. இவர் தமிழ் சினிமாவில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வனமகன் படம் மூலம் அறிமுகமானார். முதல் படமே நல்ல வரவேற்பை தந்ததை அடுத்து அம்மணிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கின.

ஆர்யாவுடன் கஜினிகாந்த், சூர்யாவுடன் காப்பான் போன்ற படங்களில் நடித்துள்ள இவர் கடந்த ஆண்டு நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்துவரும் இவர் அடுத்ததாக 66 வயதான பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா படத்தில் நடிக்க சமீபத்தில் ஒப்பந்தமானார்.

இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, அப்பா வயது நடிகருடன் ஜோடி சேரும் சாயிஷா என கேலி கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். இதனால் தற்போது அந்த படத்தில் இருந்து சாயிஷா விலகியுள்ளதாக கூறப்படுகிறது. தேதிகளை காரணம் காட்டி அந்த படத்தில் இருந்து ஒதுங்கி விட்டாராம். ஆனால் சமூக வலைத்தளங்களில் எழுந்த கேலி, கிண்டல் அவர் அந்த படத்தில் இருந்து விலக முக்கிய காரணம் என கூறப்படுகிறது.


Advertisement