சினிமா வீடியோ

பிரமாண்ட மேடையிலேயே தனது மனைவியை கதறி அழவைத்த சன் டிவி சீரியல் நடிகர்! வைரலாகும் வீடியோ!

Summary:

sayasingh cry on stage

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர்  தெய்வமகள். இந்த தொடரில் பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் கிருஷ்ணா. இத்தொடரின் மூலம் இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உருவானது.

அதனைத் தொடர்ந்து கிருஷ்ணா தற்போது ரன் தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் அத்தொடரில் அவருக்கு ஜோடியாக அவரது மனைவி சாயாசிங் நடித்து வருகிறார்.

சாயாசிங் தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திருடா திருடி என்ற  திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் அப்படத்தில் இடம்பெற்ற  மன்மத ராசா பாடலின் மூலம் சாயாசிங் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து அவர் மேலும் சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் சன் குடும்ப விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது . இந்த விழாவில் கிருஷ்ணா மற்றும் சாயாசிங் ஜோடியினர் கலந்து கொண்டனர். அப்பொழுது மேடையில் பேசிய கிருஷ்ணா எங்களுக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. நான் சாயாசிங்கிற்கு ஏராளமான  கஷ்டத்தையும் கண்ணீரையும் தந்துள்ளேன் என்று வருத்ததுடன் கூறியுள்ளார் இதனை கேட்டதும் நடிகை சாயாசிங் மேடையிலேயே தன்னையும் மீறி கதறி அழுதுள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement