அது எங்க விருப்பம்! முதல்வருக்கு கண்டனம் தெரிவித்த திவ்யா சத்யராஜ்! ஏன் தெரியுமா??

அது எங்க விருப்பம்! முதல்வருக்கு கண்டனம் தெரிவித்த திவ்யா சத்யராஜ்! ஏன் தெரியுமா??


sathyaraj-daughter-condemned-against-utthrakanth-cm

பெண்கள் ஜீன்ஸ் அணிவது குறித்து பேசிய உத்தரகாண்ட் முதல்வருக்கு நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் முதல்வர் திராத் சிங் ராவத் சமீபத்தில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஏற்பாடு செய்திருந்த  நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்பொழுது பேசிய அவர், பெண்கள் நாகரிகம் என்ற பெயரில் கிழிந்த ஜீன்ஸ் அணிக்கின்றனர். இப்படி பெண்கள் முழங்கால் தெரிய உடை அணிவது குழந்தைகளுக்கு மோசமான எடுத்துக்காட்டாக மாறும் என பேசியிருந்தார்.

Jeans

இந்த நிலையில் நடிகர் சத்யராஜின் மகளும்,  ஊட்டச்சத்து நிபுணரும், மகிழ்மதி இயக்கத்தின் நிறுவனருமான திவ்யா சத்யராஜ்  இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஷார்ட்ஸ் மற்றும் கிழிந்த ஜீன்ஸ் அணிந்திருக்கும் புகைப்படங்களைப் பதிவேற்ற வேண்டாம் எனவும், அரசியல் ஆர்வமுள்ள பெண் காட்டன் புடவை தான் அணிந்து கொள்ளவேண்டும் என நிறைய பேர் எனக்கு அறிவுரை கூறினர். 

 தனக்குப் பிடித்த உடையை அணிவதற்கு, ஒவ்வொரு பெண்ணுக்கும் முழு சுதந்திரம் உள்ளது.  ஒரு பெரியாரிஸ்டாக திரு. தீரத் சிங்கின் பேச்சை நான் கடுமையாக எதிர்க்கிறேன். நாங்கள் எதை அணியவேண்டும் எனக் கூறுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். மேலும் அதில் கிழிந்த ஜீன்ஸ் மற்றும்  ஷார்ட்ஸ் அணிந்துள்ள புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.