சிறுபிள்ளைகளாக நடிகர் கவுண்டமணியுடன் இருக்கும் இவங்க யார்னு தெரியுதா? அட..இப்போ அவங்க பெரும் பிரபலமாச்சே!!

சிறுபிள்ளைகளாக நடிகர் கவுண்டமணியுடன் இருக்கும் இவங்க யார்னு தெரியுதா? அட..இப்போ அவங்க பெரும் பிரபலமாச்சே!!


sathyaraj-children-with-gowndamani-photo-viral

தமிழ் சினிமாவில் தற்போது எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்தாலும் தனது இடத்தை யாராலும் நிரப்ப முடியாதபடி பெரும் ஜாம்பவனாக திகழ்ந்து வருபவர் கவுண்டமணி. இவரது காமெடிகளுக்கென தற்போது வரை பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 

தமிழ் சினிமாவில் காமெடி சக்கரவர்த்தியாக கொடிகட்டி பறக்கும் இவர் ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடியில் அசத்தியுள்ளார். மேலும் தற்போதுள்ள காமெடி நடிகர்களுக்கு இவர் பெரும் ரோல் மாடலாக உள்ளார். அதிலும் அவர் நடிகர் செந்திலுடன் இணைந்து செய்யும் காமெடிகள் வேற லெவல்.

Gavundamani

அவர் தற்போது எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் நடிகர் கவுண்டமணி நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் மற்றும் மகள் திவ்யாவுடன் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சிபிராஜ் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும்,  திவ்யா ஊட்டச்சத்து நிபுணராகவும் பிரபலமாக உள்ளார்.