மாமியார் மருமகள் சண்டையில இப்படித்தான் இருக்கணும்! பிக்பாஸ் சுரேஷை வச்சு செய்து நடிகர் சதீஷ் செய்த காரியத்தை பார்த்தீர்களா!

மாமியார் மருமகள் சண்டையில இப்படித்தான் இருக்கணும்! பிக்பாஸ் சுரேஷை வச்சு செய்து நடிகர் சதீஷ் செய்த காரியத்தை பார்த்தீர்களா!



sathish-tease-bigboss-suresh

தமிழ் சினிமாவில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ஜெர்ரி படத்தில் நடித்ததன் மூலம் சினிமாதுறையில் அறிமுகமானார் நடிகர் சதீஷ். அதனைத் தொடர்ந்து அவர் மதராசபட்டினம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.

பின்னர் சதீஷ் தொடர்ந்து மெரினா, எதிர்நீச்சல், மான் கராத்தே, பைரவா என தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக அசத்தி வருகிறார். நடிகர் சதீஷ் எப்பொழுதும்  சமூகவலைதளங்களில் பிஸியாக இருப்பவர். 

இந்நிலையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட  பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நேற்று ரேகா மற்றும் சனம் ஷெட்டிக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும்  மாறிமாறி பேசிக்கொண்டு  இருந்துள்ளனர். அப்பொழுது சுரேஷ் சக்ரவர்த்தி சோபா மேல் காலை தூக்கி போட்டுகொண்டு ஹாயாக படுத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

அத்தகைய புகைப்படத்தை பகிர்ந்து நடிகர் சதீஷ் மாமியார், மருமகள் சண்டையின்போது கணவன் இருக்கவேண்டிய ஏகாந்த தவநிலை என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.