சினிமா

கோலாகலமாக நடைபெற்ற காமெடி நடிகர் சதிஷின் திருமணம்! வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படங்கள்.

Summary:

Sathish marriage photo

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சதிஷ். இவர் விஜய், சிவகார்த்திகேயன், கார்த்தி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். 

இவர் நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு தான் இவரின் நிச்சயதார்த்தம் முடிந்தது. மேலும் சதிஷ்  திருமணம் செய்து கொண்டது சிக்சர் படத்தின் இயக்குனரான சாச்சியின் தங்கையை தான். சாச்சியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த சதிஷ் அவரின் தங்கை மீது பழக்கம் ஏற்ப்பட்டு பின் காதலாக மாறியது.

இந்நிலையில் நேற்று சதிஷின் வரவேற்பு நிகழ்ச்சியானது மிகவும் கோலாகலமாக நடிப்பெற்றது. இன்று அவரின் திருமணம் நடைப்பெற்றுள்ளது. அந்த திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை மணமக்களுக்கு கூறினர். இந்நிலையில் தற்போது அவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement