சினிமா

சதிஷின் திருமணம் காதல் திருமணமா! மணபெண்ணின் அண்ணன் ட்விட்டரில் விளக்கம்!

Summary:

Sathish marriage arrange marriage

நடிகர் சதிஷ் தற்போது ஒரு முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் விஜய், சிவகார்த்திகேயன், சித்தார்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிக்ஸர் படத்தின் இயக்குனரான சாச்சியின் தங்கையுடன் நிச்சயதார்த்தம் முடிவடைந்தது. மேலும் சதிஷ் நடிகர் வைபவ்யுடன் இணைந்து சிக்சர் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை வைத்து பலர் சதிஷின் திருமணம் காதல் திருமணம் என நினைத்து வருகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை என மணபெண்ணின் அண்ணன் சாச்சி தற்போது விளக்கம் அளித்துள்ளார். சதிஷ் திருமணம் ஒரு நிச்சயிக்கப்பட்ட திருமணம் என கூறி சதிஷ் - சிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


Advertisement