சசிகுமாரின் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் மோஷன் போஸ்டர் !!!

இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் ’கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சசிக்குமார்.சசிகுமார் நடிப்பில் வெளியான ‘சுந்தர பாண்டியன்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் மீண்டும் சசிகுமாரை வைத்து படம் இயக்குகின்றார்.
நடிகர் சசிக்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் ‘கொடிவீரன்’ மற்றும் ‘அசுரவதம்’. இந்த இரண்டு படங்களுமே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய அளவில் போகவில்லை. இதையடுத்து அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நாடோடிகள் 2’ படம் முடிவடைந்து இன்னும் வெளியாகாமல் அப்படியே கிடக்கிறது. அதற்கு காரணம் கடன் சுமையே என்று கூறப்படுகிறது.
இதையடுத்து சசிகுமார், பட தயாரிப்புப் பணியை கொஞ்ச காலத்திற்கு ஒதுக்கி வைத்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளார். அதன்படி தற்போது தனுஷுடன் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார் சசிகுமார்.
எஸ்.ஆர்.பிரபாகரன் மற்றம் சசிகுமாரின் கூட்டணியில் 2012-ஆம் ஆண்டு வெளியான ‘சுந்தர பாண்டியன்’ இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இந்தப் படத்துக்குப் பிறகு ‘இது கதிர்வேலன் காதல்’ மற்றும் ‘சத்ரியன்’ ஆகிய படங்களை எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது அந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்தப் படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.மதுரைப் பின்னணியில் உருவாகும் இந்தப் படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மோஷன் போஸ்டர் பணிகள் நிறைவந்துள்ள நிலையில், இந்த மோஷன் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.