சினிமா

பிரபல நடிகருடன் சரவணன் மீனாட்சி மைனாவுக்கு இரண்டாவது கல்யாணம்.! செம கியூட்டான நிச்சயதார்த்த புகைப்படம் இதோ !

Summary:

sarvanan mmeenachi maina got second marriage

தமிழ் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் குடும்ப பாங்கான கிராமத்து பெண்ணாக, மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நந்தினி. இவர் வம்சம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் அதனை தொடர்ந்து பல தொடர்களில் நடித்த அவர் எத்தகைய கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றாற்போல் மிகவும் அருமையாக நடிக்கக் கூடியவர். மேலும் இவருக்கு எனவே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

நடிகை நந்தினி கடந்த சில வருடங்களுக்கு முன்பு கார்த்திக் என்ற ஜிம் மாஸ்டரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதனை தொடர்ந்து குடும்பப் பிரச்சினைகள் காரணமாக கார்த்திக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால்  நந்தினியை பலரும் மோசமாக விமர்சனம் செய்தனர். மேலும் அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளையும் வைத்தனர்.

 இருப்பினும் அதனைத் தொடர்ந்து நதினி சீரியல், டான்ஸ் ஷோ என பிஸியாகி விட்டார். இந்நிலையில் சமீபகாலமாக அவர்  அழகு தொடரில் நடித்து வரும் நடிகர் யோகேஷை காதலித்து வருவதாக செய்திகள் பரவி வந்த நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்து ஒரு செய்ய உள்ளனர்.

மேலும் அவர்களுக்கு அண்மையில் நிச்சயதார்த்த விழா நடைபெற்று உள்ளது. இத்தகைய புகைப்படங்களை மைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement