சினிமா

யோகிபாபுவால் அஜித் விஜய் ரசிகர்கள் மோதல்...!

Summary:

sarkar-yogibabu-speech

தமிழ் சினிமாவின் பிரபல மற்றும் முன்னணி நடிகரான தளபதி விஜய்-யின் சர்க்கார் படம் தற்போது திரைக்கு வர தயாராக இருக்கும் நிலையில் நேற்று இசைவெளியீட்டு விழா நடந்து குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கிறது. இதனை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.  இசைவெளியீட்டு விழாவில் சர்க்கார் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர். நடிகர்கல்  நடிகைகள் இணயக்குனர் என அனைவரும் மேடையில் பேசினார்கள். 

இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் யோகிபாபு அவர்கள் பேசினார்கள். அவர் பேசும் போது ” நான் நிறைய நடிகர்களுடன் நடித்து வருகிறேன். அஜித் சாருடன் கூட நடித்து வருகிறேன், விஜய் அண்ணா வேற லெவல் ” என்று கூறினார்.

இதனை ஊடகங்கள் ”அஜித் சாருடன் கூட நடித்து வருகின்றேன், விஜய் அண்ணா வேற லெவல் என்று திரித்து கூறியுள்ளது ”  இதனால் ட்வீட்டரில் ரசிகர்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டது. அவரவர் சமூக வலைதள பக்கத்தில் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். 


Advertisement