சர்கார் அப்டேட்...! "சிம்டாங்காரன்" என்ற பாடல் வெளியீடு..!

sarkar-song-release-today


sarkar-song-release-today

இளையதளபதி விஜய் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படம் "சர்க்கார்". இந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் வருகின்ற தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. மேலும் இந்த படத்தின் பாடல்கள் வருகின்ற அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று நடக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போது இந்த படம் சமீபத்தில் சென்னையில் தூங்கி நடந்து வருகின்றது. பிராம்மண அரங்குகள் அமைத்து முக்கிய காட்சிகள் படமாக்கி வருகின்றது என படக்குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அரசியல் தலைவர்களாக ராதாரவி மற்றும் பழ.கருப்பையா நடிக்கின்றனர். வரலட்சுமி, யோகி பாபு, பிரேம் குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 

இந்நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் சிம்டாங்காரன்" என்ற பாடல் வெளியாகியுள்ளது. அதன் வீடியோ பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது...