சினிமா

சர்கார் படத்தில் சர்ப்ரைஸ் இருக்கு...! நடன இயக்குனர் ஸ்ரீதர் பேட்டி...!

Summary:

sarkar-new-surprise

சர்கார் படத்தில் சர்ப்ரைஸ் இருக்கு...! நடன இயக்குனர் ஸ்ரீதர் பேட்டி...! 

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘சர்கார்’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, ராதா ரவி உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர். 

இந்நிலையில் இதில் வழக்கம் போல சர்ப்ரைஸ் வைத்திருப்பதாக நடன இயக்குனர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து நடன இயக்குனர் ஸ்ரீதர் கூறியது: 
விஜய் டான்ஸ் ஆடும் பாட்டில் ஒரு சர்ப்ரைஸ் வைப்பது என் வழக்கம். சர்கார் படத்திலும் ஒரு சர்ப்ரைஸ் வைத்துள்ளேன். அது நிச்சயமாக ரசிகர்களை குஷிப்படுத்தும். மேலும் நீளமான ஸ்டெப்ஸ் வைத்தாலும் விஜய் அதை ஒரே டேக்கில் முடித்துவிடுவார். பல்லவி முழுவதையும் ஒரே டேக்கில் ஆடுவது விஜய்யை தவிர யாராலும் முடியாது. இந்த படத்தின் பாடலுக்காக கடுமையாக உழைத்திருக்கின்றோம். இவை அனைத்தும் விஜய் ரசிகர்களை திருப்தி செய்யும் என்றும் ஸ்ரீதர் கூறினார். 

 

Sridhar master shares his experiences from the sets of Sarkar.#SarkarKondattam #Sarkar pic.twitter.com/uhP14hEbFs

— Sun Pictures (@sunpictures) October 13, 2018

 


 

 

 

 


Advertisement