சினிமா

சர்க்கார் இசைவெளியீட்டு ரஜினி கலந்துகொள்ள காரணம் என்ன?

Summary:

sarkar-movie-audio-release

நம்ம தமிழ் திரையுலகில் முன்னணி மற்றும் மிகவும் பிரபலமான நடிகரின் ஒருவரான இளையதளபதி விஜயுடன் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைகிறார். அந்த படத்தின் தலைப்பு தான் சர்க்கார். இப்படத்தில் விஜயுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் , வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் செயல்படுகிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவுறும் நிலையில் இப்படம் தீபாவளிக்கு திரையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த படத்தின் போஸ்டர் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வருகிற அக்டொபேர் 2ம் தேதி சென்னையில் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாய் நடைபெற இருக்கிறது. இதனை நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்கள் வெளியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட இருக்கிறது. இதேபோல் ரஜினி நடித்து வரும் பேட்ட படமும் சன் பிச்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது. அதனால் தான் ரஜினி அவர்கள் இசைவெளியீட்டு விழாவிற்கு வருவதாக கூறப்படுகிறது... 


Advertisement