
Sarkar collection lose in kerala and america
சர்கார் படத்தின் போஸ்டர்கள் வெளியானதிலிருந்தே பிரச்சனைகள் தொடங்கிவிட்டது. விஜய் புகைபிடிப்பதை ஊக்குவிப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின. பின்னர் படங்கள் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில் தீபாவளி அன்று வெளியான சர்க்கார் படம் ஆளும் கட்சியை மிகவும் விமர்சிப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின. தமிழக அரசியல் பிரமுகர்கள் குறிப்பாக ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் படத்திற்கு எதிராக போர் கொடி தூக்கினர்.
சர்ச்சைக்குரிய காட்சிகளை தூக்கவிட்டால் படம் தடைசெய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார். மேலும் சர்க்கார் படத்திற்கு எதிராக அங்கங்கே போராட்டங்கள் வெடித்தன. மதுரையில் ஒரு தியேட்டர் அருகே போராட்டக்குழுவினர் போராட்டம் நடத்தினர்.
சென்னை காசி தியேட்டர் உள்ளே புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த சர்க்கார் பேனர்களை கிழித்தனர். இதனால் திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்ற சர்க்கார் பட குழு சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க ஒத்துக்கொண்டது.
இதன் காரணமாகவோ என்னவோ இரண்டு இடங்களில் விஜய் சர்கார் படத்தின் வசூல் அடிமட்டத்தில் உள்ளது கூறப்படுகிறது. இது குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், கேரளா மற்றும் அமெரிக்காவில் கடும் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளதாம். கேரளாவில் இப்போது வரை ரூ. 9 கோடி தான் வசூல் வந்துள்ளதாம். அங்கு ரூ. 25 கோடி வரை வசூல் செய்தாலே நல்ல லாபத்தை பெரும், அமெரிக்காவில் 6 லட்சம் டாலர் வசூல் வர இன்னும் 7 லட்சம் டாலர் வசூல் வந்தாலே லாபம் என கூறுகின்றனர் சர்கார் பட குழுவினர்.
Advertisement
Advertisement