#Breaking: அமரன் படத்தை பார்த்து கண்கலங்கி அழுத ரஜினிகாந்த்; காரணம் என்ன?.. அவரே சொன்ன தகவல்.!
சர்க்காருக்கு அடுத்து தமிழக முதல்வராக களமிறங்கும் நடிகர் விஜய்!. அரசியல் வட்டாரங்கள் பதட்டம்!.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இளையதளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் சர்க்கார். இந்த படத்தினை வெற்றி இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று தாம்பரத்தில் உள்ள சாய்ராம் கல்லூரியில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன இந்த படத்தில் நகைச்சுவை நடிகராக மீண்டும் யோகிபாபு விஜயுடன் இணைந்துள்ளார்.
இந்நிலையில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் நேற்று இசை வெளியீட்டு விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன், நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
மேலும் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய், என்னுடைய சில திரைப்படங்கள் வெற்றியடையும்போது ஏற்படும் சந்தோஷம், அதற்கு காரணமான உங்களை பார்க்கும்போதும் ஏற்படுகிறது என கூறினார்.
மெர்சல் திரைப்படத்தில் கொஞ்சம் அரசியல் இருந்தது. சர்காரில் அரசியல் மெர்சலாக உள்ளது. எல்லோரும் தேர்தலில் நின்றுவிட்டு சர்கார் அமைப்பார்கள். ஆனால் நாங்கள் ‘சர்கார்’ அமைத்துவிட்டு தேர்தலில் நிற்கப்போகிறோம் என கூறினார்.
நடிகர் விஜய் தேர்தலில் நிற்க போகிறோம் என்று சொன்ன அந்த வார்த்தைக்கு பிறகு ரசிகர்களின் ஆரவாரம் அதிகமாக இருந்தது. மேலும், நிஜத்தில் முதலமைச்சரானால், படத்தில் நடிக்க மாட்டேன். உண்மையாக மக்களுக்காக உழைப்பேன், லஞ்சம் ஊழல் போன்றவற்றை ஒழிப்பேன் என கூறினார்.