சினிமா

நடிகராக களமிறங்கும் நடிகர் சந்தானத்தின் மகன்! எந்த படத்தில் தெரியுமா?

Summary:

Santhanam son dikilona

ஒரு காலத்தில் காமெடியில் அதிக அளவு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் சந்தானம். இவர் முதலில் தொகுப்பாளராகவும், சின்னத்திரையில் ஒளிபரப்பான லொள்ளுசபா என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தனது திறமையை உலகரிய செய்தவர்.

அதன் பிறகு தனது கடின உழைப்பால் உயர்ந்து தமிழ் சினிமாவில் காமெடி மன்னாக திகழ்ந்தார். காமெடி கதாபாத்திரத்தில் கலக்கிய இவருக்கு நடிகராக வேண்டும் என்ற ஆசையில் தற்போது ஹுரோவாக மட்டுமே நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான A1 படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனை அடுத்து டகால்டி என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் தான் இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சந்தானம் டிக்கிலோனா என்ற படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் தனது மகளை நடிக்க வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தானத்தின் மகனை திரையில் காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். 


Advertisement