தமிழகம் சினிமா

சந்தானம் 3 வேடத்தில் நடிக்கும் படத்திற்கு என்ன டைட்டில் தெரியுமா? உச்சகட்ட குஷியில் ரசிகர்கள்!

Summary:

santhanam next movie title


ஏ1 படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்திற்கு "டிக்கிலோனா" என தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பின்னர் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தமிழகத்தின் காமெடி கிங்காக வலம் வந்தவர் நடிகர் சந்தானம். தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான ஏ1 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து கே.ஜே.ஆர் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் சந்தானம் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார். சந்தானம் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கும்  இந்தப் படத்துக்கு "டிக்கிலோனா" என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்குகிறார்.

இந்த படம் குறித்து இயக்குனர் கூறுகையில் இந்தப் படம் அறிவியல், நகைச்சுவையுடன் கூடிய சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் என கூறியுள்ளார். இப்படம் 2020ல் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement