சினிமா

வாவ்.. புதிய கார் வாங்கிய குக் வித் கோமாளி புகழுக்கு சந்தானம் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்! என்னனு பார்த்தீர்களா!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரபலங்கள தற்போது சினிமாக்களில்

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரபலங்கள தற்போது சினிமாக்களில் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்து வருகின்றனர்.  தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த  நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் புகழ்.

இவர் தனது முகபாவனைகள், பாடி லாங்குவேஜ் மற்றும் நகைச்சுவை கலந்த ரகளைத்தனமான பேச்சால் மக்கள் மனதை பெருமளவில் கவர்ந்துள்ளார். இந்த நிலையில் புகழுக்கு தற்போது ஏராளமான பட வாய்ப்புகள் வந்து கொண்டுள்ளது. புகழ் தல அஜித்தின் வலிமை படத்திலும், ஹரி இயக்கத்தில் அருண் விஜய் இயக்கும் படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சந்தானம் படத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் குக் வித் கோமாளி புகழ் அண்மையில் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.  இதுகுறித்து படப்பிடிப்பில் சந்தானம் விசாரித்துள்ளாராம். இந்த நிலையில் புகழ் தனது காரை எடுத்துச் சென்று சந்தானத்திடம் காட்டியுள்ளார். அந்த காரை படப்பிடிப்பு தளத்தில் ஓட்டி பார்த்த சந்தானம் புகழுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அவருக்கு ஒரு சிறிய வெள்ளி பிள்ளையார் ஒன்றையும் காரில் வைக்க சொல்லி பரிசாக கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement