சினிமா

நீயும் இவ்வளவு பெரிய நடிகனா வருவன்னு எதிர்பார்க்கல டா! கலக்கலான நகைச்சுவையுடன் வெளியான சந்தானத்தின் டகால்டி டீஸர்!

Summary:

Santhanam dakkalti teasar

முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளுசபா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பின்னர் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தமிழகத்தின் காமெடி கிங்காக வலம் வந்தவர் நடிகர் சந்தானம். தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார்.

சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான ஏ1 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் டகால்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்துள்ளார். நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் ராதா ரவி, மனோ பாலா, ரேக்கா போன்ற நடிகர்கள் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் டீஸர் படு கலக்கலாக வெளியாகி உள்ளது. இதனை பார்க்கும் போது படம் கண்டிப்பாக செம காமெடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement