நடிகர் கமலுக்காக, சாண்டி செய்த அசத்தலான காரியம்!! இணையத்தை தெறிக்கவிட்டு குவியும் வாழ்த்துக்கள்!!



sandy-wihws-for-kamal-birthday

தமிழ் சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து தற்போது உலக நாயகனாக ஜொலித்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். அவர் களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சதிரமாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் இதுவரையில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தநிலையில் தற்போது அவரது திரைப்பயணம் 60 ஆண்டுகளை எட்டியுள்ளது. 
 
 மேலும் நடிகர் கமல் சமீபத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியை வெற்றிகரமாக தொகுத்து வழங்கிவந்தார். பின்னர் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன்2 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் அதனை முன்னிட்டு நவம்பர் 7 முதல் 9 வரை 3 நாட்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Sandy

இந்நிலையில் நடன இயக்குனரும், பிக்பாஸ் பிரபலமுமான சாண்டி கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமலுடன் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் . மேலும் அதில் அவர் சிறந்த முறையில் வழிநடத்தியதற்கும், வாழ்க்கை முழுவதும் சுமந்து செல்ல அழகிய தங்கமான நினைவுகளை கொடுத்த உங்களுக்கு நன்றி என்றும் இனிய பிறந்தநாள் வாழ்த்து எனவும் பதிவிட்டுள்ளார்.