சினிமா

சண்டகோழி 2 வெளியாகும் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு...! ரசிகர்கள் மகிழ்ச்சி...!

Summary:

sandakozhi2-will-release-oct18

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை மற்றும் நடிகர் சங்க தலைவரான நடிகர் விஷால் நடித்து லிங்குசாமி இயக்கிய மெகா ஹிட் படம் சண்டக்கோழி. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது படப்பிடிப்பு முடிந்து வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் இணை நாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கிறார். இப்படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். 

நடிகர் விஷால் நடித்து அவரே இந்த படத்தை தயாரிக்கவும் செய்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை வெளியிட இருக்கிறது. இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்ற ரசிகர்களின் கேள்விக்கு படக்குழு இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு கொடுத்துள்ளது. இப்படம் அடுத்தமாதம் அக்டோபர் 18ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கிறார்கள். அவரவர் சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தெரிவித்து வருகின்றனர். 


Advertisement