சினிமா

தர்ஷன்- சனம் ஷெட்டி காதல் அவ்வளவுதானா! காதலி போட்ட ஒத்த பதிவால் குழம்பிப்போன ரசிகர்கள்!!

Summary:

sanam shetty tweet viral

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் தர்ஷன். இலங்கையை சேர்ந்த விளம்பர மாடலான இவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர்.

மேலும் பிக்பாஸ் இறுதிவரை சென்று இவர்தான் பிக்பாஸ் பட்டத்தை தட்டிச்செல்வார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்தநிலையில் அவர் குறைந்த வாக்குகளைப்பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இது போட்டியாளர்கள் பார்வையாளர்கள் என அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அவருக்கு ஏராளமான படவாய்ப்புகள் குவிய துவங்கியது. மேலும் தனது ராஜ்கமல் ப்ரொடக்ஷன் மூலம் தர்ஷனுக்கு படவாய்ப்பு வழங்குவதாகவும் கமல் வாக்கு அளித்துள்ளார். மேலும் தர்ஷன் காதலி நடிகை சனம் ஷெட்டி. இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்துள்ளனர். 

இந்நிலையில் சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராமில் இப்போது புரிகிறது நான் அதிகமாக எதுவும் கேட்பதாக கேட்கவில்லை, ஆனால் தவறான நபரிடம் கேட்டுவிட்டேன் என பதிவிட்டுள்ளார். மேலும் யாரேனும் உங்களை விட்டு வெளியே நடக்க விரும்பும்போது கதவைத் திறந்து வைத்திருங்கள். அது இழப்பா அல்லது ஆதாயமா என்பதை காலம் உணர்த்தும் என குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார்.இந்நிலையில் தர்ஷன் மற்றும் சனம்ஷெட்டி இருவரும் பிரிந்துவிட்டதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement