தமிழில் அறிமுகமாக இருக்கும் நடிகை சம்யுக்தா ஹெக்டே...!

தமிழில் அறிமுகமாக இருக்கும் நடிகை சம்யுக்தா ஹெக்டே...!


samyuktha-hekde-intro-tamil

கன்னட திரையுலகின் பிரபலமான நடிகைகள் பெரும்பாலும் தமிழ் மொழியிலும் நடிக்க வருகிறார்கள். தற்போது அங்கு முன்னணி கதாநாயகியாக இருக்கும் சம்யுக்தா ஹெக்டே, தற்போது ‘பப்பி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் பட உலகுக்கு அறிமுகம் ஆகிறார். 

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக வருண் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் போகன், நெருப்புடா, நைட் ஷோ ஆகிய படங்களில் நடித்தவர், இவர். வருண்-சம்யுக்தா ஹெக்டேயுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய காதாபாத்திரத்தில் ஒரு "நாய்" நடித்து வருகிறது. இந்த படத்தை இயக்குனர் நட்டுதேவ் இயக்கி வருகிறார். 

இதற்கு முன்னர் நடிகை சம்யுக்தா ஹெக்டே நடித்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னட படத்தில், துறு துறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ‘பப்பி’ படத்தில் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து இழுக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனால் பப்பி படத்திலும் இவர் நடிப்பு மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.