கர்ப்பமே ஆகாத நிலையில் குழந்தை பிறக்கும் நாள் மற்றும் நேரத்தை கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகை சமந்தா! வைரலாகும் வீடியோ.

கர்ப்பமே ஆகாத நிலையில் குழந்தை பிறக்கும் நாள் மற்றும் நேரத்தை கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகை சமந்தா! வைரலாகும் வீடியோ.


Samantha video

தமிழ் சினிமாவின் நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சமந்தா. அதனைத்தொடர்ந்து விஜய், சூர்யா,தனுஷ், விக்ரம், ஜிவா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு நடிகரான நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும், காதலித்து வந்தனர். பின்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணமானது அக்டோபர் 6, 2017 அன்று நடைப்பெற்றது.

samantha

இந்நிலையில் தற்போது திருமணமாகி இரண்டு வருடங்கள் நிறைவடைந்த நிலையில் ரசிகர்கள் அவரிடம் எப்போது உங்கள் குழந்தை வெளிவரும் என சர்ச்சையான கேள்வி கேட்டுள்ளனர்.

அதில் கோபமான சமந்தா, அதற்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் வரும் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலை 7 மணிக்கு குழந்தை பெற்று கொள்வேன் என கூறியுள்ளார். 

ஆனால் இன்னும் கர்ப்பமே ஆகாத நிலையில் இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து குழந்தை பிறக்கும் நேரம், தேதியை கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். தற்போது அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.