விவாகரத்திற்கு காரணம் இதுதான்!! முதன்முதலாக திருமண வாழ்க்கை குறித்து ஓப்பனாக பேசிய நடிகை சமந்தா!!

விவாகரத்திற்கு காரணம் இதுதானா!! முதன்முதலாக திருமண வாழ்க்கை குறித்து ஓப்பனாக பேசிய நடிகை சமந்தா!!


samantha-talk-about-marriage-life

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவிலேயே டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கு ஹீரோக்களுக்கு இணையாக ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 

நடிகை சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரும், முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் நடிகை சமந்தாவிற்கு எதிராக பல கருத்துக்களும் பரவியது. அதற்கெல்லாம் பதிலடி கொடுத்துவிட்டு சமந்தா தனது பணிகளில் பிஸியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் நடிகை சமந்தா தற்போது இயக்குநர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் காஃபி வித் கரண் சீசன் 7 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

samantha

இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் சமந்தாவின் திருமண வாழ்க்கை குறித்து கரண் கேட்டதற்கு சமந்தா, திரைப்படங்களில் நீங்கள் திருமண வாழ்க்கையை காட்டிய தருணங்கள் நன்றாக இருந்தது. ஆனால் உண்மையில் திருமண வாழ்க்கை கேஜிஎஃப் போன்று இருக்கிறது என கூறியுள்ளார்.