200 கோடி ஜீவனாம்சத்தை மறுத்த நடிகை சமந்தா! அடேங்கப்பா.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்!!

200 கோடி ஜீவனாம்சத்தை மறுத்த நடிகை சமந்தா! அடேங்கப்பா.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்!!



samantha-property-value-details-viral

தமிழ் தெலுங்கு என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா கடந்த 2011ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவின் மகன் ஆவார். இருவருக்கும் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகும் சமந்தாவின் மார்க்கெட் குறையாமல் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் நட்சத்திர தம்பதிகளாக விளங்கிய நாகசைதன்யா மற்றும் சமந்தா இருவரும் விவாகரத்து பெற்று பிரிய போவதாக சமீபகாலமாக இணையத்தில் தகவல்கள் பரவி வந்தது. மேலும் இதனை உறுதி செய்து இருவரும் அண்மையில் தனியாக அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

samantha

இந்நிலையில் சமந்தாவிற்கு நாக சைதன்யாவின் குடும்பத்தினர்கள் ரூபாய் 200 கோடி ஜீவனாம்சமாக தர முன் வந்ததாகவும், ஆனால் சமந்தா அதனைப் பெற மறுத்து விட்டதாகவும் தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில் முன்னணி டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வரும், 34 வயதாகும் நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு சுமார் 84 கோடி எனவும் செய்திகள் பரவி வருகிறது.