சினிமா

ஜீன்ஸ் பேண்ட்டை இப்படி போட்டுகிட்டு என்னம்மா போஸ் இது! வைரலாகும் சமந்தாவின் புகைப்படங்கள்!

Summary:

நடிகை சமந்தாவின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்ததன்  மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. இவர் விஜய், சூர்யா,தனுஷ், ஜீவா, விஷால் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏரளமான வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறக்கிறார்.

மேலும் சமந்தா கைவசம் தற்போது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் கேம் ஓவர் உள்ளிட்ட படங்கள் உள்ளன. சமந்தா கடந்த சில வருடங்களுக்கு முன்பு நாகார்ஜுன் மகனும், தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணத்திற்கு பின்னரும் மார்க்கெட் குறையாமல் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி  புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் அவர் தற்போது ஜீன்ஸ் பேண்ட்டை திருப்பிப்போட்டு வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

 

    


Advertisement