உடல் தோற்றத்தை விட ஒருவருக்கு இதுதான் ரொம்ப முக்கியம்! நடிகை சமந்தா ஓபன் டாக்!

உடல் தோற்றத்தை விட ஒருவருக்கு இதுதான் ரொம்ப முக்கியம்! நடிகை சமந்தா ஓபன் டாக்!


Samantha opentalk in interview

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சமந்தா. மேலும் இவர் விஜய், சூர்யா, விக்ரம் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக  உள்ளார். 

 இந்நிலையில் நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் மார்க்கெட் குறையாத சமந்தா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

samantha

மேலும் 2019ஆம் ஆண்டு ஆங்கில பத்திரிக்கை ஒன்று நடத்திய மிகவும் விரும்பக்கத்தக்க பெண்கள் பட்டியலில் சமந்தா முதலிடம் பிடித்தார். இது குறித்து  பேட்டி ஒன்றில் சமந்தா கூறுகையில், நான் என் கணவருடன் செல்லும்போது கவர்ச்சிகரமாகவும், மிகவும் பிடித்தமானவளாக இருப்பதாகவும் உணர்கிறேன்.

ஒவ்வொருவருக்குமே நம்பிக்கைதான் மிக முக்கியமான ஒன்று.  மேலும் ஒருவரது உடல் தோற்றத்தை விட அவரது மனத்தோற்றமே அவரை மற்றவருக்கு மிகவும் பிடித்தவர்களாக  மாற்றுகிறது என என்று  சமந்தா கூறியுள்ளார்.