சினிமா

எங்க இதை நீங்க செய்யுங்க.. சமந்தா விடுத்த வேற லெவல் சேலஞ்ச்! அசர வைக்கும் வீடியோ!!

Summary:

எங்க நீங்க செய்யுங்க.. சமந்தா விடுத்த வேற லெவல் சேலஞ்ச்! அசர வைக்கும் வீடியோ!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவிலேயே டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 

சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இருவரும் சில காலங்களுக்கு முன்பு விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர், அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிடுவார்.

இந்நிலையில் சமந்தா தற்போது தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு, 2022 ம் ஆண்டை கிக் ஸ்டார்ட் செய்யுங்கள். எந்த கருவியும் இல்லாமல் இந்த லெவல் அப் சேலஞ்சை செய்யுங்கள். எனது ட்ரைனர் எனக்கு சேலஞ்ச் செய்தார். இப்போது நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். நீங்கள் இந்த சவாலை செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Advertisement