தமிழகம் இந்தியா சினிமா

இன்னும் 4 நாள்ல வீட்ல விசேஷம்..!! அதுக்குள்ள சமந்தா இப்படி ஒரு முடிவுக்கு வந்துட்டாங்களே!! வருந்தும் ரசிகர்கள்..

Summary:

இன்னும் 4 நாள்ல வீட்ல விசேஷம்..!! அதுக்குள்ள சமந்தா இப்படி ஒரு முடிவுக்கு வந்துட்டாங்களே!! வருந்தும் ரசிகர்கள்..

தனது காதல் கணவரை பிரிவதாக சமந்தா இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு என இந்தியாவில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளில் ஒருவர் சமந்தா - நாகசைதன்யா ஜோடி. இருவரும் பல ஆண்டுகளாக காதலித்துவந்தநிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர்.

இருவருக்கும் திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் முடியாவுல்லநிலையில், இந்த தம்பதியினருக்கு இதுவரை குழந்தை ஏதும் இல்லை. குடும்ப வாழ்க்கை, சினிமா, விளம்பரம் என இருவரும் பிசியாக வாழ்ந்துவந்தநிலையில்தான், இருவரும் விரைவில் பிரியப்போவதாக செய்திகள் வெளியானது.

ஆனால் தங்கள் பிரிவு குறித்து கணவன் மனைவி இருவரும் எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்துவந்தனர். இந்நிலையில்தான், இருவரும் தங்கள் பிரிவு குறித்து இன்று முதல் முறையாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இன்னும் நான்கு நாட்களில் இருவருக்கும் 5 ஆம் ஆண்டு திருமண விழா நடைபெற இருந்தநிலையில், திருமண நாளுக்கு 4 நாள் முன் இருவரும் பிரிவதாகா அறிவித்துள்ளது, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement