சினிமா

கணவருடன் விவாகரத்து! அடுத்து என்ன? சமந்தா போட்ட முதல் பதிவு! என்ன கூறியுள்ளார் பாத்தீங்களா!!

Summary:

கணவருடன் விவாகரத்து! அடுத்து என்ன? சமந்தா போட்ட முதல் பதிவு! என்ன கூறியுள்ளார் பாத்தீங்களா!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகரும், நடிகர் நாகார்ஜுன் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த சமந்தா மற்றும் நாக சைதன்யாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இருவரும் பிரிய உள்ளதாகவும் அண்மைக் காலமாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது.

அதனைத் தொடர்ந்து வரும் 7ஆம் தேதி தங்களது திருமண நாளை கொண்டாடவிருந்த நிலையில் சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவருமே தாங்கள் பிரியவிருக்கும் செய்தியை அதிகாரபூர்வமாக தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்தனர். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் திருமணத்திற்கு பிறகு தனது சமூக வலைதளபெயரில் கணவரின் குடும்ப பெயரான அக்கினேனி என்பதை இணைத்திருந்த சமந்தா கடந்த சில காலங்களுக்கு முன்பு அதனை நீக்கிவிட்டு வெறும் S என மாற்றியிருந்தார்.

இந்நிலையில் விவாகரத்து அறிவித்த பிறகு தனது சமூக வலைத்தள பெயரை சமந்தா என மாற்றிக்கொண்டார். பின்னர் முதன்முதலாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், இந்த உலகத்தை மாற்ற வேண்டும் என்று நான் நினைத்தால் முதலில் என்னை நான் மாற்றிக் கொள்ள வேண்டும். படுக்கையிலேயே இருக்கக்கூடாது கடினமாக உழைக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.


Advertisement