
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக சமந்தா மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார்.
பிக்பாஸ், ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று பெருமளவில் ரசிக்கப்பட்ட நிகழ்ச்சி. இதற்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சி தெலுங்கில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பமானது.
இந்த நிலையில் அதன் நான்காவது சீசன் கடந்த செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி தொடங்கி நாளுக்கு நாள் மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்ற நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகை சமந்தா தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வெளியானது.
இதுகுறித்து ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில் நேற்று தசரா கொண்டாட்டத்தை முன்னிட்டு சமந்தா பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். அவருக்கு நாகார்ஜுனா வீடியோ கால் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சில வாரங்களுக்கு நடிகை சமந்தா தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement