விஜய் சேதுபதி ஓவர் வெயிட்.. அவர் நடிச்சிருக்கலாம்! ரசிகர்களின் கமெண்டிற்கு சமந்தா கொடுத்த பதிலடி!!

விஜய் சேதுபதி ஓவர் வெயிட்.. அவர் நடிச்சிருக்கலாம்! ரசிகர்களின் கமெண்டிற்கு சமந்தா கொடுத்த பதிலடி!!


samantha-answerbto-the-comment-about-vijay-sethupathi

பிரபல இயக்குனராக திகழ்ந்துவரும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இதில் ஹீரோயின்களாக சமந்தா மற்றும் நயன்தாரா நடித்திருந்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

பல எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளிவந்த இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் சமந்தாவின் கதீஜா கதாபாத்திரத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் அதற்கு நன்றி கூறி சமந்தாவும் வீடியோ வெளியிட்டிருந்தார். 

அதனைத் தொடர்ந்து ரசிகர்கள்  சமந்தா, நயன்தாராவுடன் விஜய் சேதுபதி நடிக்கும் போது உடல் எடையை குறைத்து இருக்கலாம்.அவர் அப்படியே குண்டாக நடித்தது பார்ப்பதற்கு நன்றாக இல்லை எனவும், அவருக்கு பதில் சிம்பு நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனவும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

samantha

இந்த நிலையில் மற்றொரு ரசிகர் ஒருவர், விஜய் சேதுபதிக்கு பதிலாக வேறு எந்த நடிகராவது நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என பலரும் கூறி வருகின்றனர். ஆனால், உண்மை என்னவென்றால் விஜய் சேதுபதி இல்லையென்றால் சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் நடித்திருக்க மாட்டார்கள் என பதிவிட்டிருந்தார்.  அதற்கு சமந்தாவும் உண்மை என்று நெத்தியடி பதில் அளித்துள்ளார்