தமிழகம் இந்தியா சினிமா

கணவரை பிரிவதாக சமந்தா சற்றுமுன் அதிகாரபூர்வ அறிவிப்பு!! முழு விவரம் இதோ..

Summary:

கணவரை பிரிவதாக சமந்தா சற்றுமுன் அதிகாரபூர்வ அறிவிப்பு!! முழு விவரம் இதோ..

தனது கணவர் நாகசைதன்யாவை பிரிவதாக நடிகை சமந்தா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்தியளவில் மிகவும் பிரபலமான நட்சத்திர தம்பதிகளில் ஒருவர் நாகசைதன்யா - சமந்தா தம்பதி. தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்ததன் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார் நடிகை சமந்தா. சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர், பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமண வாழ்க்கை சிறப்பாக சென்றுகொண்டிருந்தநிலையில், சமீபகாலமாக இவர்கள் இருவரும் விவாகரத்து பெறப்போவதாக செய்திகள் வெளியானது. ஆனால் விவாகரத்து குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பையும் சமந்தாவோ அல்லது அவரது கணவர் தரப்போ தெரிவிக்கவில்லை.

இதனால் இந்த தகவல் உண்மையா அல்லது வழக்கம்போல் வதந்தியா என்ற ஒரு குழப்பம் ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாகவே இருந்துவந்தது. இந்நிலையில், தனது கணவரை பிரிவது குறித்து சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரபூர்வக தெரிவித்துள்ளார்.

நீண்ட ஆலோசனைக்கு பிறகு,  எங்கள் சொந்த பாதையை தொடர நானும், சைதன்யாவும் பிரிகிறோம் என சமந்தா குறிப்பிட்டுள்ளார்.


Advertisement