சினிமா

திருமணம் முடிந்து 3 வருடம் கழித்து சமந்தா வீட்டில் விசேஷம்..! ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்.!

Summary:

Samantha Akkineni pregnant expecting her first baby

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்துவரும் இவர் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிப்பதாக இருந்தது.

காத்து வாக்குல இரண்டு காதல் என்று பெயரிடப்பட்டிருந்த இந்த படத்தில் இருந்து தற்போது  சமந்தா விளக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமந்தா கர்ப்பமாக இருப்பதே அவர் படத்தில் இருந்து விலக்கியதற்கான காரணம் என கூறப்படுகிறது.

சமந்தா - நாகசைதன்யா இடையே கருத்து வேறுபாடு நிகழ்வதாகவும், கணவரின் குடும்பத்துடன் சமந்தாவுக்கு ஒத்துப்போகவில்லை, இருவரும் விரைவில் விவாகரத்து செய்ய போகிறார்கள் என செய்திகள் வந்த நிலையில், சமந்தா தற்போது கர்ப்பமாக இருக்கும் செய்தி இணையத்தில் உலா வந்துகொண்டிருக்கிறது.


Advertisement