சினிமா

ஐயோ.. என்னாச்சு! நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதி! உண்மையை உடைத்த மேனேஜர்!!

Summary:

ஐயோ.. என்னாச்சு! நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதி! உண்மையை உடைத்த மேனேஜர்!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்திய சினிமாவிலேயே டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், இருவரும் பரஸ்பரமாக பிரிவதாக அண்மையில் அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து சமந்தா படங்கள், சுற்றுலா செல்வது என தன்னை பிஸியாக வைத்துக் கொண்டுள்ளார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சமந்தா திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து கடப்பாவில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் நடிகை சமந்தாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில் இதுகுறித்து சமந்தாவின் மேனேஜர் தனது ட்விட்டரில், நடிகை சமந்தாவிற்கு லேசான இருமல் இருந்ததால் அவர் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொண்டார். சமந்தா முற்றிலும் நலமாக உள்ளார். தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவித்துள்ளார்.


Advertisement