திரைத்துறையில் இருந்து பிரேக் எடுத்துவிட்டு விளம்பர படங்களில் நடித்து வரும் சமந்தா.. என்ன காரணம்.?



samantha-act-in-advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, போன்ற மொழிகளில் தற்போது நடித்து வருகிறார். தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார் சமந்தா.

samantha

ஆனால் தமிழில் சமீபத்தில் இவர் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தொடர் தோல்வியை அடைந்து வந்தன. இதன் காரணமாக திரைத்துறையில் பிரேக் எடுத்து கொண்டார் சமந்தா.

மேலும் மயோசைட்டிஸ் எனும் நோய் பாதிப்பினால் சிகிச்சை எடுத்து வரும் சமந்தா அடிக்கடி வெளிநாடு செல்வதாலும் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். இறுதியாக விஜய் தேவர் கொண்டாவுடன் குஷி திரைப்படத்தின் நடித்திருந்தார்.

samantha

இது போன்ற நிலையில் தற்போது சமந்தா இந்தி நடிகர் ஷாகித் கபூருடன் விளம்பர படங்களில் நடித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சமந்தாவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.