சினிமா

விக்னேஷ் சிவன் படத்திலிருந்து விலகிய சமந்தா! இது தான் காரணமா?சந்தோசத்தில் ரசிகர்கள்!

Summary:

samantha

தமிழ் சினிமாவின் நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சமந்தா. அதனைத்தொடர்ந்து விஜய், சூர்யா,தனுஷ், விக்ரம், ஜிவா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு நடிகரான நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும், காதலித்து வந்தனர். பின்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணமானது அக்டோபர் 6, 2017 அன்று நடைப்பெற்றது.

இவர் தனது திருமணத்திற்கு பிறகும் படங்களில் கமிட்டாகி நடித்து வந்துள்ளார். இவர் நடிப்பில் அண்மையில் தெலுங்கில் ஜானு படம் வெளியானது. அதனை தொடர்ந்து தமிழில் தற்போது கூட விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல இரண்டு காதல் என்ற படத்தில் கமிட் ஆனார்.

ஆனால் தற்போது அந்த படத்திலிருந்து சமந்தா விலகி உள்ளார். அதற்கு காரணம் சமந்தா கர்ப்பமாக இருப்பது தான் என பத்திரிகையாளர் ஒருவர் உறுதியாக கூறியுள்ளார். 


Advertisement