22 வருஷ கனவு நிறைவேறிருச்சு! தந்தையின் மனதை குளிர வைத்த சாக்ஷி அகர்வால்! வைரலாகும் புகைப்படம்!!

22 வருஷ கனவு நிறைவேறிருச்சு! தந்தையின் மனதை குளிர வைத்த சாக்ஷி அகர்வால்! வைரலாகும் புகைப்படம்!!


sakshi-agarwal-buy-luxurious-car

தமிழ் சினிமாவில் ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் சாக்ஷி அகர்வால்.  அதனைத் தொடர்ந்து அவர்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டார். மேலும் சில சர்ச்சைகளாலும், தனது விளையாட்டின் மூலமும் அவர் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.

மேலும் சாக்ஷி ஆர்யா நடிப்பில் வெளிவந்த டெடி மற்றும் அரண்மனை 3, சிண்ட்ரெல்லா போன்ற படங்களிலும் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் நடித்திருந்த நான் கடவுள் இல்லை, தி நைட்போன்ற படங்கள் இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் சாக்ஷி அகர்வால் அவ்வப்போது விதவிதமான கவர்ச்சி போட்டோசூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

Sakshi agarwal

இந்த நிலையில் அவர் தற்போது  புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்து மிகவும் மகிழ்ச்சியுடன் சாக்ஷி அகர்வால், சொகுசு கார் வாங்குவது எனது தந்தையின் 22  வருட கனவு. அது தற்போது நிறைவேறியுள்ளது. புதிய மெர்சிடிஸ் E வகுப்பு காரை வாங்கியுள்ளார். இது அவரது வாழ்க்கையின் சந்தோஷமான தருணம் என கூறியுள்ளார்.