நடிகை சாய்பல்லவியின் அம்மா, அப்பா இவர்கள்தானா? வைரலாகும் கியூட் பேமிலி புகைப்படம்!

நடிகை சாய்பல்லவியின் அம்மா, அப்பா இவர்கள்தானா? வைரலாகும் கியூட் பேமிலி புகைப்படம்!



saipallavi-family-photo-viral

மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. இப்படத்தை தொடர்ந்து அவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவானது. மேலும் இப்படத்தை தொடர்ந்து அவருக்கென ஏராளமான பட வாய்ப்புகளும் குவிந்தது.

சாய்பல்லவி தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் தியா படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த அவர் மாரி 2, என்.ஜி.கே என 2 படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் அவரது கைவசம் ராணாவுடன் விராட பருவம், நாக சைத்தன்யாவுடன் லவ் ஸ்டோரி, பவன் கல்யாணுடன் ஒரு படம் உள்ளது.

saipallavi

 இந்நிலையில் நடிகை சாய் பல்லவி தனது அம்மா, அப்பா மற்றும் தங்கையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை சாய்பல்லவியின் தங்கை பூஜாவும் தற்போது ஏ.எல்.விஜய் தயாரிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்குனராக அறிமுகமாகும் படத்தில்  ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். 

saipallavi