#Breaking: ஆஸ்கரில் மிகப்பெரிய அதிர்ச்சி.. இந்திய படங்கள் தேர்வு இல்லை.. ஷாக் தகவல்.!
லாக்டவுனில் சத்தமே இல்லாமல் நடந்த சூப்பர் சிங்கர் சாய்சரண் திருமணம்! பொண்ணு யார் தெரியுமா? வைரலாகும் அழகிய புகைப்படம்!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற சூப்பர் சிங்கர் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் சாய்சரண். தனது சிறு வயதில் இருந்தே சங்கீதத்தை கற்றுவரும் சாய்சரண் கடந்த 2010ஆம் ஆண்டு ஒளிபரப்பான சங்கீத மஹா யுத்தம் என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சாய்சரண் சூப்பர் சிங்கர் டி20, மற்றும் பல நிகழ்ச்சிகளில் விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். மேலும் அவர் மரங்கொத்தி பறவை படத்தின் மூலம் டி.இமான் இசையமைப்பில் பின்னணி பாடகர் ஆனார். அதனை தொடர்ந்து ஏராளமான படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார்.
இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி சத்தமில்லாமல் சாய்சரண் திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். இந்த திருமணத்தில் சூப்பர் சிங்கர் போட்டியாளர் திவாகர் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.