தளபதியின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு.! ஏன்? இதனால்தானா? பரபரப்பில் திரையுலகம்!!

தளபதியின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு.! ஏன்? இதனால்தானா? பரபரப்பில் திரையுலகம்!!


sa-chandrasekar-house-japti-for-76000-amount

நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். நடிகராக, இயக்குனராக வலம்வந்த அவர் நடிகர் சத்யராஜ் நடிப்பில் இயக்கிய திரைப்படம் சட்டப்படி குற்றம். கடந்த 2011ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்திற்கு விளம்பர செலவு 76,122 ரூபாய் ஆகியுள்ளது. இந்த நிலையில் ஒப்பந்தம் செய்யப்பட்ட அந்த தொகையை வழங்காததாக எஸ்.ஏ சந்திரசேகர் மீது விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன் என்பவர் சென்னை அல்லிகுளம் 25வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும் அந்த வழக்கு மனுவில் தங்களுக்கான தொகையை வசூலித்து தருமாறும் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மனுவை விசாரணை செய்த உரிமையியல் நீதிமன்றம் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகருக்கு சொந்தமாக சாலிகிராமத்தில் உள்ள வீட்டிலிருக்கும் ஏசி, டேபிள், பேன் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளது.

sa chandrasekar

அதனடிப்படையில் நீதிமன்ற பணியாளர்கள், பொருட்களை ஜப்தி செய்ய சென்றபோது அங்கு இயக்குனர் சந்திரசேகரின் அலுவலக பணியாளர்கள் பொருட்களை ஜப்தி செய்ய விடவில்லை என கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் காவல்துறை உதவி வழங்க நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்க மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.